மெட்டு

"சில பிரிவுகள்
முடிவதில்லை.

அவை...

பின்னணியில் ஒலிக்கும்
ஒரு பாடலைப் போல,

நிறுத்த நினைத்தாலும்
நிற்பதில்லை.

நினைக்க நினைத்தாலும்
நினைவதில்லை.

இசை முடிந்த பிறகும்,

சில மெட்டுகள் மட்டும்
அமைதியை விட்டு
வெளியேறுவதில்லை.

அவை...

நினைவுகளாக அல்ல,

ஒரு காலத்தில்
வாழ்க்கையாக இருந்ததன்

எதிரொலியாக." 


Comments

Popular Posts